புதன், 7 ஜூன், 2017

மருத்துவர் தனது விந்தணுக்களை பெண்களுக்கு செலுத்தியது அம்பலம்!

ஹாலந்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு தன்னுடைய விந்தணுக்களை செலுத்தியதாக மருத்துவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
ஹாலந்தின் ராட்டர்டாம் பகுதி அருகே ஜான் கார்பாத் என்ற மருத்துவர் பிஜ்தார்ப் செயற்கை கருத்தரிப்பு மையத்தை
 நடத்தி வந்தார்.
இங்கு சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தன்னுடைய சொந்த விந்தணுக்களை செலுத்தியதாக ஜான் கார்பாத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு துறையின் முன்னோடி என தன்னை அழைத்துக் கொண்ட ஜான் கார்பாத், கொடையாளிகள் பற்றிய விபரங்களை போலியாக எழுதியதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெற்றோர்களில் ஒருவர், தன்னுடைய குழந்தை பழுப்பு நிற கண்களை கொண்டவனாக இருக்கிறான் எனவும், மற்றொருவர் தன்னுடைய குழந்தை மருத்துவரை போன்றே இருப்பதாகவும் 
தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தொடர் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு மையம் மூடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 89வது வயதில் ஜான் கார்பாத் காலமானதை தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை ராட்டார்டாம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவரது உடமைகளை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் நீதிமன்றத்தில் 
முறையிட்டன.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், ஜான் கார்பாத்தின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் ஏதும் இல்லை என மருத்துவரின் குடும்ப வழக்கறிஞர் நீதிமன்றத்தில் 
வாதாடினார்.
ஒருவேளை மருத்துவரின் டிஎன்ஏ-வுடன், குழந்தைகளின் டிஎன்ஏ ஒத்துப்போனால் 1980களில் பெரும்பாலும் பிறந்த இந்தக் குழந்தைகள் அந்த மருத்துவர் மீது வழக்கு தொடர முடியும்.
இதற்கிடையே ஜான் கார்பாத் உயிருடன் இருந்தவரையிலும் டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்து
வந்தமை  குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவற்கிரி நெற்

 
Blogger Templates