வெள்ளி, 2 ஜூன், 2017

உங்கள் குழந்தைகளுக்கு தினமும் இதெல்லாம் கொடுங்க!

நாம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கொடுக்கும் சத்தான உணவுகள் தான், அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. எனவே அவர்களுக்கு இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ள இயற்கையான உணவுப்

பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பீட்ரூட் கீர் சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, அதை ஜூஸ் செய்து வடிகட்டி

கொள்ள வேண்டும். இதனுடைய சுவையை அதிகமாக்குவதற்கு அரை மூடி தேங்காய்ப் பால், வெல்லம், ஏலம் மற்றும் முந்திரி ஆகியவற்றை பீட்ரூட் ஜூஸில் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

வாழைப்பூ சட்னி வாழைப்பூவில் நரம்பு நீக்கி சுத்தம் செய்து, அதனுடன் சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நிக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றை கலந்து அரத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாழைப்பூ சட்னியை இட்லி, தோசைக்கு சட்னியாகவும், சாதத்திற்கு துவையலாகவும் பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தவிருத்தி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை

குணப்படுத்துகிறது. புதினா ஜூஸ் புதினா தழைகளுடன், 100 கிராம் வெல்லம், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய சாருடன்,

ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை கலக்க வேண்டும். இந்த புதினா ஜூஸை
தொடர்ந்தது குழந்தைகள் மற்றும் பெண்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை, பசியின்மை மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை இந்த புதினா ஜூஸ் குணப்படுத்துகிறது. பழசாலட்
கொய்யாப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம் போன்ற பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால்,

குழந்தைகளின் ரத்தத்தை சுத்திகரித்து சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் மற்றும் அதனுடன் இளநீர், 100 கிராம் வெல்லம் ஆகிவற்றைச் சேர்த்து

வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து அதிகரித்து, முடி நன்றாக வளரும் 
தன்மையை தருகிறது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவற்கிரி நெற்

 
Blogger Templates