தினமும் நாம்சமைக்க உதவும் பொருள்களே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. இருந்த போதிலும், இன்றைய காலத்தில் அதனை நாம் தொட்டுகூட பார்ப்பதில்லை.
சிறிய வியாதியாக இருந்தாலும் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம்.
கெமிக்கல் மருந்துகளையே அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஆம் காலத்திற்கேற்ப புதிய புதிய நோய்கள் வருகின்றன.
இவற்றிற்கு எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடாமல் இயற்கை மருத்துவத்தை மக்கள் பின்தொடர்வது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதில் தான் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.
இன்று உடல் பருமன் மிக அதிகமாக இருக்கும் நாடு என எடுத்துக் கொண்டால் இந்தியா தான் முதலில் உள்ளது.
இது மிகவும் அபாயகரமான செய்தி தான்.
இது போல, மன அழுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதமும் அதிகமாக தான் உள்ளது.
மன அழுத்தம் ஒருவரின் மனம் சம்பந்தப்பட்டது என்றும் அது அந்த நபரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும் என்பதும் நமக்கு நன்றாகவெ தெரியும்.
இந்த வகையில், அதிக கொழுப்பு மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்
எள் விதைகள் – 1 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
முதலில் ஒரு கிண்ணத்தில் எள் விதைகளை எடுத்துக் கொண்டு அதில் மேலே கூறிய அளவு தேன் ஊற்றி நன்றாக கலக்கி பசை போல வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு, இதனை ஒவ்வொரு நாள் காலை மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்மைகள்
இந்த கலவை உட் கொள்வதால், ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகள் கரையும்.
மேலும், இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதனால், மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம்
கட்டுப்படுத்தப் படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக