கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து விழும் அபாய கட்டத்தில் உள்ளதாக பொலிஸார்
எச்சரித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி 19 அவன்யூவில் அமைந்துள்ள மாடிக் கட்டடத்தில் பொலிஸ் அதிகாரிகள் தங்கியுள்ளனர்.இந்த நிலையிலேயே, அவர்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸ் தலைமையகம்
அறிவித்துள்ளது.
குறித்த மாடிக் கட்டடம் இடிந்து விழும் ஆபத்தில் உள்ளமையினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தொகுதியில் 300க்கும் அதிக பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருப்பதாக பொலிஸ் தலைமையக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அருகில் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றமையினால் அங்கு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வெடிப்புகள் ஏற்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக