உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடல் நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஜூன், 2017

வெண்டைக்காயினால் இவ்வளவு நோய்கள் குணமாகுமாம் ?

இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்.
மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும்.
எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா? மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா?
அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வெண்டைக்காயின் சத்துக்கள்
வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.
வெண்டைக்காய் தண்ணீர்
சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும்
ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
சர்க்கரை நோயை விரட்டும்
சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த
சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.
மருத்துவ ஆய்வு
வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது.
வறுத்த வெண்டைக்காய் விதை
துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில்,
இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.
கொலஸ்ட்ரால்
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும்.
சிறுநீரக நோய்கள்
சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும்.ஆஸ்துமா
முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



நமக்கு உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்¨!

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்
என்று சொன்னால்,அது மீன் எண்ணெய் தான்,,,
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக
வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர,இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது.அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை. இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். 
இத்தகைய
மீனை சமைத்து சாப்பிடமாட்டோம்.ஆனால் இதில்
இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும்,எண்ணெயை குடிக்க
முடியாது,அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய்
மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த
மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால்,இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும்
சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும்
கொலஸ்ட்ரால் இருந்தால்,அது இதயத்திற்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே இதை சாப்பிட்டால்,
இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த
ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை  குடித்தால் ,குண்டாவார்கள்
என்று தான் தெரியும்.ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள்,
 மூளையை நன்கு
சுறுசுறுப்போடு,எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும்.
மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும்.பெண்களின் இடுப்பு எலும்புகள்
நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால்,எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு,
மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக
பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்
போன்று இருக்கும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


உங்கள் குழந்தைகளுக்கு தினமும் இதெல்லாம் கொடுங்க!

நாம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கொடுக்கும் சத்தான உணவுகள் தான், அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. எனவே அவர்களுக்கு இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ள இயற்கையான உணவுப்

பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பீட்ரூட் கீர் சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, அதை ஜூஸ் செய்து வடிகட்டி

கொள்ள வேண்டும். இதனுடைய சுவையை அதிகமாக்குவதற்கு அரை மூடி தேங்காய்ப் பால், வெல்லம், ஏலம் மற்றும் முந்திரி ஆகியவற்றை பீட்ரூட் ஜூஸில் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

வாழைப்பூ சட்னி வாழைப்பூவில் நரம்பு நீக்கி சுத்தம் செய்து, அதனுடன் சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நிக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றை கலந்து அரத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாழைப்பூ சட்னியை இட்லி, தோசைக்கு சட்னியாகவும், சாதத்திற்கு துவையலாகவும் பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தவிருத்தி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை

குணப்படுத்துகிறது. புதினா ஜூஸ் புதினா தழைகளுடன், 100 கிராம் வெல்லம், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய சாருடன்,

ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை கலக்க வேண்டும். இந்த புதினா ஜூஸை
தொடர்ந்தது குழந்தைகள் மற்றும் பெண்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை, பசியின்மை மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை இந்த புதினா ஜூஸ் குணப்படுத்துகிறது. பழசாலட்
கொய்யாப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம் போன்ற பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால்,

குழந்தைகளின் ரத்தத்தை சுத்திகரித்து சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் மற்றும் அதனுடன் இளநீர், 100 கிராம் வெல்லம் ஆகிவற்றைச் சேர்த்து

வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து அதிகரித்து, முடி நன்றாக வளரும் 
தன்மையை தருகிறது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


உங்கள் கொலஸ்ட்ராலை குறைக்கஒரு பொருள் போதும்?

தினமும் நாம்சமைக்க உதவும் பொருள்களே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. இருந்த போதிலும், இன்றைய காலத்தில் அதனை நாம் தொட்டுகூட பார்ப்பதில்லை.
சிறிய வியாதியாக இருந்தாலும் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம்.
கெமிக்கல் மருந்துகளையே அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஆம் காலத்திற்கேற்ப புதிய புதிய நோய்கள் வருகின்றன.
இவற்றிற்கு எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடாமல் இயற்கை மருத்துவத்தை மக்கள் பின்தொடர்வது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதில் தான் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.
இன்று உடல் பருமன் மிக அதிகமாக இருக்கும் நாடு என எடுத்துக் கொண்டால் இந்தியா தான் முதலில் உள்ளது.
இது மிகவும் அபாயகரமான செய்தி தான்.
இது போல, மன அழுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதமும் அதிகமாக தான் உள்ளது.
மன அழுத்தம் ஒருவரின் மனம் சம்பந்தப்பட்டது என்றும் அது அந்த நபரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும் என்பதும் நமக்கு நன்றாகவெ தெரியும்.
இந்த வகையில், அதிக கொழுப்பு மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்
எள் விதைகள் – 1 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
முதலில் ஒரு கிண்ணத்தில் எள் விதைகளை எடுத்துக் கொண்டு அதில் மேலே கூறிய அளவு தேன் ஊற்றி நன்றாக கலக்கி பசை போல வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு, இதனை ஒவ்வொரு நாள் காலை மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்மைகள்
இந்த கலவை உட் கொள்வதால், ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகள் கரையும்.
மேலும், இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதனால், மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம்
 கட்டுப்படுத்தப் படுகின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


நிங்கள் அழகான மெல்லிய இடுப்பை பெறபயிச்சி முறை !

தரையில் மல்லாந்து படுத்து, கால்களை மடக்கி பாதங்களைத் தரையில் பதிக்க வேண்டும். கால்களை சற்று அகட்டி இருக்க வேண்டும். தொடைகள் ஒட்டக் கூடாது. முன்னங்கைகளை மடித்து,
 செங்குத்தாக உயர்த்த வேண்டும். கைவிரல்கள் மூடியபடி இருக்கட்டும். இப்போது, தலை மற்றும் கழுத்தை முன்பக்கமாக வளைத்து, வலது கையை நீட்டி, இடது கால் முட்டியைத் தொடுவதுபோல
 கொண்டுவர வேண்டும். பழைய நிலைக்குத் திரும்பி, இடது கையை இதேபோல கொண்டுவர வேண்டும். இது ஒரு செட். இதுபோல 15 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்: இடுப்புப்பகுதி, வயிற்றுப்பகுதிக் கொழுப்புகள் குறையும். தசைகள் நன்கு இறுகும். கலோரி எரிக்கப்படும். ஒட்டுமொத்த உடலுக்கும் வலு கிடைக்கும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


நாம் வெற்றிலை போடுவதால் ஏற்படும்சில நன்மை!

உணவு உண்டபின் பிறகு வெற்றிலை போடும் பழக்கம் உள்ளது. பொதுவான இந்த பழக்கத்தால் பல உடல் நற் பயன்கள் அடங்கியிருக்கிறது.

ஆனால் வெற்றிலையை சப்புவதால் உடல் எடையும் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை மிளகுடன் கலக்கும் போது, இந்த கலவை உடல் எடையை குறைக்கும் சிறந்த கருவியாக செயல்படும்.

வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!! இந்த செயலை செய்து வந்தால், எண்ணி 8 வாரங்களில் நல்ல பலனை காண்பீர்கள். இப்போது அது எப்படி வேலை செய்கிறது என்பதையும், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்கலாமா…?
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



ஊதா நிற கிழங்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

ஊதா நிற உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையைக் அதிகரிக்கச் செய்யாது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்ப்பதற்குத் சிறியதாகத் தோன்றினாலும், இது இதய நோயின் ஆபத்துகளைக் குறைக்கிறது. ஊதா நிற உருளைக்கிழங்கு ஆக்ஸிஜன் உட்பொருட்களைக் கொண்டுள்ளது

இக் கிழங்கு கொரியாவில், எடையைக் குறைக்கும் பிரபலமான நாட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

அதிக ரத்த அழுத்தத்துடன் அதிக எடையைக் கொண்ட 18 பேரிடம் ஒரு நாளைக்கு இரு முறை 6-8 சிறிய மைக்ரோவேவ் அளவுடைய ஊதா உருளைக்கிழங்குகள் கொடுத்து சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை 4 வாரங்களுக்கு நடைபெற்றது.

சோதனை முடிவில் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து காணப்பட்டதோடு உடல் எடையும் அதிகரிக்கவில்லை.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

நீங்கள் சர்க்கரை நோயில் இருந்து விடுபட வேண்டுமா?

சர்க்கரை நோயைத் தடுக்கும் அத்திபழம் அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு
 உண்டு. சர்க்கரை
நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.
அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள
பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.
சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



செவ்வாய், 15 மார்ச், 2016

நாம் பகலில் நித்திரை கொள்வது நல்லதா கெட்டதா?

thukkam
உணவு, உடை, வீடுபோல தூக்கமும் அனைவருக்கும் அவசியம். நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வைத் தந்து, ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் தருவது தூக்கம்தான்.
இரவில் தூங்குவதுபோலவே பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இன்று பலருக்கும் வாடிக்கையாக உள்ளது. பகல் தூக்கத்தால் உடல் எடை கூடிவிடும், சோம்பேறித்தனம் அதிகரிக்கும் என்பன போன்ற கருத்துக்கள் நம்மிடையே உலவிவருகின்றன. உண்மையில் பகல் தூக்கம் நல்லதா… கெட்டதா?
பகல் தூக்கமபகலில் உறங்கும் குட்டித்தூக்கத்துக்கு `நாப்’ (Nap) என்று பெயர். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை தரும்போது, 20-30 நிமிடங்கள் உறங்கினால், உடலும் மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடும்.
அனைவருக்கும் பகல் தூக்கம் தேவையா?
பகல் தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமானது அல்ல. இரவில் தேவையான அளவு தூக்கமும் பகலில் வேலை நெருக்கடியும் இல்லாதவர்களுக்கு, பகல் தூக்கம் அவசியம் இல்லாதது. இவர்கள் பகலில் தூங்கினால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் வேலைக் களைப்பு இருந்தாலும், பகலில் தூக்கம் வரவே வராது. இவர்களும் பகல் தூக்கத்தைப் பற்றி கவலைகொள்ள வேண்டியது இல்லை.
யார் தூங்கலாம்?
இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்க்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள், வேலைக்கு முன்னரே ஒரு குட்டித்தூக்கம் போட்டு விழிக்கலாம்.
தொடர்ச்சியாக நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், சிறிது நேர ஓய்வாகத் தூங்கலாம்.
பொதுவாக, நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் குட்டித்தூக்கம் போடலாம்.
20 நிமிடத் தூக்கம் நம்மை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும். நினைவுத்திறனை அதிகரிப்பதுடன் வேண்டாத விஷயங்களையும் ஞாபகத்தில் இருந்து நீக்க உதவும். சில நாடுகளில் இதுபோன்று பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவது ஒரு வழக்கமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
பகல் தூக்கத்தின் நன்மைகள்
பகலின் குட்டித் தூக்கத்தால் நமது விழிப்புஉணர்வு அதிகரிக்கிறது. மேலும், நமது செயல்திறனில் 24 சதவிகிதம் 
அதிகரிக்கிறது.
பகலில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும். அதீத பகல் தூக்கம், உடலுக்கு நல்லது அல்ல. நேர வரையறை செய்யப்பட்ட குட்டித்தூக்கத்தால் உற்சாகமாகச் செயல்பட முடியும்.
பகல் தூக்கம், புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதோடு, அந்த நாளின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
பகல் தூக்கமானது இருதய நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூக்கத்தின்போது கவனிக்க வேண்டியவை
குட்டித் தூக்கமானது 30 நிமிடங்களுக்கு மேலே செல்லாமல்

பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், 30 நிமிடங்களுக்கு மேலான பகல் தூக்கம் சோம்பல் உணர்வைக் கொடுப்பதோடு நமது இரவுத் தூக்கத்தையும் கெடுக்கும்.

தூங்குவதற்கு அமைதியான காற்றோட்டமான இடத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம். மங்கலான ஒளி உள்ள இடமும் உகந்தது.

பகல் தூக்கத்துக்கு சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று.

வழக்கமாக எந்த நேரத்தில் நீங்கள் உற்சாகம் இழக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நேரத்தைத்தேர்ந்தெடுக்கலாம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
thukkam . இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


thukkalx

நவற்கிரி நெற்

 
Blogger Templates