புதன், 5 ஜூலை, 2017

தூக்கம் என்பது தானாக வருவது சிறப்பாகும் அதுவே சயனம!

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் அன்றாட வாழ்வில் அவசியமானது… ஆனந்த சயனம்… ஆனாலும் பலருக்கு இது கிட்டாமலே உலைப்பது கண்கூடு.. குழந்தைக் காலத்தோடே கலைந்து பேனது.. ஆனந்த சயனம்.. பாயில் வீழ்தாலும் கண்களை
 இறுக மூடினாலும் தூக்கம் என்பது தானாக வருவது சிறப்பாகும்… அதுவே ஆனந்த சயனமாகும்.. நாளை என்ற பெரு
 நினைப்பில் கனவில் மனிதன் தூக்கம் தொலைக்கின்றான்.. ஆசைகள் அவசர தேவைகள் பிள்ளைகள் என்பதோடு அடுத்தவனோடு மறைமுக ஒப்பீட்டு போர் இவற்றால் இழக்கின்றான்
 ஆனந்த சயனம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 4 ஜூலை, 2017

செட்டிக்குளப்பிரதேசத்தில் தொடரும்மரணம் 45 நாட்களுக்குள் நால்வர்?

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் சிறுநீரக நோய் தாக்கம் காரணமாக கடந்த 45 நாட்களுக்குள் நான்கு பேர் மரணமடைந்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது கிராமத்தை விட்டு வெளியேறுவதா என கேள்வி 
எழுப்பியுள்ளனர்.
யுத்தம் காரணமாக கிளிநொச்சி உள்ளிட்ட வட பகுதிகளில் இருந்து 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக 
தங்க வைத்தனர்.
அம்மக்களை மீள்குடியேற்றுவதற்காக தட்டான்குளம் பகுதி தெரிவு செய்யப்பட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டிருந்தனர்.
135 குடும்பங்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் சிறுநீரக நோயால் நூறுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 45 நாட்களுக்குள் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே இச்சிறுநீரக நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பில் இப்பகுதி மக்கள் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரிடமுமம் முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால், தமது பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து செல்லலாம் என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





நவற்கிரி நெற்

 
Blogger Templates