தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயகச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜூலை, 2017

செட்டிக்குளப்பிரதேசத்தில் தொடரும்மரணம் 45 நாட்களுக்குள் நால்வர்?

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் சிறுநீரக நோய் தாக்கம் காரணமாக கடந்த 45 நாட்களுக்குள் நான்கு பேர் மரணமடைந்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது கிராமத்தை விட்டு வெளியேறுவதா என கேள்வி 
எழுப்பியுள்ளனர்.
யுத்தம் காரணமாக கிளிநொச்சி உள்ளிட்ட வட பகுதிகளில் இருந்து 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக 
தங்க வைத்தனர்.
அம்மக்களை மீள்குடியேற்றுவதற்காக தட்டான்குளம் பகுதி தெரிவு செய்யப்பட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டிருந்தனர்.
135 குடும்பங்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் சிறுநீரக நோயால் நூறுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 45 நாட்களுக்குள் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே இச்சிறுநீரக நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பில் இப்பகுதி மக்கள் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரிடமுமம் முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால், தமது பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து செல்லலாம் என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 8 ஜூன், 2017

யாழில் சுனாமி அச்சத்தை தொடர்ந்து வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ். வானில் தோன்றியுள்ளதாகவும், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கடும் காற்றுடனான 
மழை பெய்துள்ளது.
சுனாமி தொடர்பில் வதந்தி பரப்ப்பட்டது. எனினும் இந்த மாற்றம் சுனாமிக்கான அறிகுறி என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இது அச்சமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் இதனை தட்டு மேகங்கள் (Shelf clouds) என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

ரயில் மோதுண்டு தெஹிவளையில் ஒருவர் பலி

தெஹிவளை முகாந்திரம் வீதிக்கு அருகில் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மருதானையில் இருந்து நேற்று 
மாலை மாத்தறை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான இஷான நிரங்க பெரேரா என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


செவ்வாய், 6 ஜூன், 2017

நாட்டில் இயற்கையின் கோரம். டெங்கு நோய்த் தாக்கம் தீவிரம்

நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளார்களே நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான  முதல் 6 மாத  காலப்பகுதியில் 56 ஆயிரத்து 887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் 12 ஆயிரத்து  212 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு கடந்த மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றமே காரணம் என 
தெரிவிக்கப்படுகின்றது. 
டெங்கு நோய் தாக்கம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டில் 12 ஆயிரத்து 610 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர். 
கடந்த மே மாதத்தில் 2 ஆயிரத்து 994 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர். ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பில் கடந்த மே மாதத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42.55  வீதத்தினால் அதிகரித்துள்ளதை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல்களில் அறியக்கூடியதாக உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


திங்கள், 5 ஜூன், 2017

நாட்டில் முட்டையின் விலையில் ஏற்பட்டதிடீர் மாற்றம்

நாட்டில் சில வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 15 ரூபாவாக இருந்த முட்டையின் விலை தற்போது 8 ரூபாவாக விற்கப்படுகின்றது.

இதனால் தங்களுக்கு 15,000 தொடக்கம் 20,000 ரூபா வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முட்டை ஒன்றின் உற்பத்தி விலை 11 ரூபாவாக இருக்கின்ற போது, அதன் விற்பனை விலை 8 ரூபாவாக இருப்பதால் தங்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள்
 கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


நவற்கிரி நெற்

 
Blogger Templates