வியாழன், 8 ஜூன், 2017

மர்மகுழு கொழும்பை அதிர வைத்துள்ளது ! மக்கள் அவதானம்

கொழும்பில் வாகனங்களில் கொள்ளையடிக்கும் மாணவ குழுவொன்றை மிரிஹான விசேட குற்ற விசாரணை அதிகாரிகள் கைது 
செய்துள்ளனர்.
வாடகை வண்டி சேவை சாரதிகளுக்கு கத்தியை காட்டி அச்சுறுத்தி அவர்களிடம் இருக்கும் தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசி மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில்
 ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மூன்று மாணவர்கள் இவ்வாறு குழுவாக செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 6 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர்கள் கொள்ளையடித்த பொருட்களின் பெறுமதி சுமார் 6 லட்சத்திற்கும் அதிகம் என குற்ற விசாரணை பிரிவு 
தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் பிலியந்தலை, கிருலப்பனையை சேர்ந்தவர்கள் என மிரிஹான விசேட பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு 
குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் பிலியந்தலை, கடுவெல, பொரலஸ்கமுவ, ராஜகிரிய ஆகிய பிரதேசங்களில் வாடகை சேவை சாரதிகளை பயணத்திற்காக அழைத்து சென்று பாழடைந்த இடத்தில் கூர்மையான கத்தியை காட்டி அவர்களிடம் உள்ள கையடக்க தொலைபேசி, தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவற்கிரி நெற்

 
Blogger Templates