வெள்ளி, 2 ஜூன், 2017

உங்கள் குழந்தைகளுக்கு தினமும் இதெல்லாம் கொடுங்க!

நாம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கொடுக்கும் சத்தான உணவுகள் தான், அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. எனவே அவர்களுக்கு இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ள இயற்கையான உணவுப்

பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பீட்ரூட் கீர் சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, அதை ஜூஸ் செய்து வடிகட்டி

கொள்ள வேண்டும். இதனுடைய சுவையை அதிகமாக்குவதற்கு அரை மூடி தேங்காய்ப் பால், வெல்லம், ஏலம் மற்றும் முந்திரி ஆகியவற்றை பீட்ரூட் ஜூஸில் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

வாழைப்பூ சட்னி வாழைப்பூவில் நரம்பு நீக்கி சுத்தம் செய்து, அதனுடன் சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நிக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றை கலந்து அரத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாழைப்பூ சட்னியை இட்லி, தோசைக்கு சட்னியாகவும், சாதத்திற்கு துவையலாகவும் பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தவிருத்தி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை

குணப்படுத்துகிறது. புதினா ஜூஸ் புதினா தழைகளுடன், 100 கிராம் வெல்லம், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய சாருடன்,

ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை கலக்க வேண்டும். இந்த புதினா ஜூஸை
தொடர்ந்தது குழந்தைகள் மற்றும் பெண்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை, பசியின்மை மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை இந்த புதினா ஜூஸ் குணப்படுத்துகிறது. பழசாலட்
கொய்யாப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம் போன்ற பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால்,

குழந்தைகளின் ரத்தத்தை சுத்திகரித்து சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் மற்றும் அதனுடன் இளநீர், 100 கிராம் வெல்லம் ஆகிவற்றைச் சேர்த்து

வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து அதிகரித்து, முடி நன்றாக வளரும் 
தன்மையை தருகிறது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


உங்கள் கொலஸ்ட்ராலை குறைக்கஒரு பொருள் போதும்?

தினமும் நாம்சமைக்க உதவும் பொருள்களே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. இருந்த போதிலும், இன்றைய காலத்தில் அதனை நாம் தொட்டுகூட பார்ப்பதில்லை.
சிறிய வியாதியாக இருந்தாலும் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம்.
கெமிக்கல் மருந்துகளையே அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஆம் காலத்திற்கேற்ப புதிய புதிய நோய்கள் வருகின்றன.
இவற்றிற்கு எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடாமல் இயற்கை மருத்துவத்தை மக்கள் பின்தொடர்வது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதில் தான் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.
இன்று உடல் பருமன் மிக அதிகமாக இருக்கும் நாடு என எடுத்துக் கொண்டால் இந்தியா தான் முதலில் உள்ளது.
இது மிகவும் அபாயகரமான செய்தி தான்.
இது போல, மன அழுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதமும் அதிகமாக தான் உள்ளது.
மன அழுத்தம் ஒருவரின் மனம் சம்பந்தப்பட்டது என்றும் அது அந்த நபரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும் என்பதும் நமக்கு நன்றாகவெ தெரியும்.
இந்த வகையில், அதிக கொழுப்பு மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்
எள் விதைகள் – 1 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
முதலில் ஒரு கிண்ணத்தில் எள் விதைகளை எடுத்துக் கொண்டு அதில் மேலே கூறிய அளவு தேன் ஊற்றி நன்றாக கலக்கி பசை போல வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு, இதனை ஒவ்வொரு நாள் காலை மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்மைகள்
இந்த கலவை உட் கொள்வதால், ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகள் கரையும்.
மேலும், இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதனால், மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம்
 கட்டுப்படுத்தப் படுகின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


நிங்கள் அழகான மெல்லிய இடுப்பை பெறபயிச்சி முறை !

தரையில் மல்லாந்து படுத்து, கால்களை மடக்கி பாதங்களைத் தரையில் பதிக்க வேண்டும். கால்களை சற்று அகட்டி இருக்க வேண்டும். தொடைகள் ஒட்டக் கூடாது. முன்னங்கைகளை மடித்து,
 செங்குத்தாக உயர்த்த வேண்டும். கைவிரல்கள் மூடியபடி இருக்கட்டும். இப்போது, தலை மற்றும் கழுத்தை முன்பக்கமாக வளைத்து, வலது கையை நீட்டி, இடது கால் முட்டியைத் தொடுவதுபோல
 கொண்டுவர வேண்டும். பழைய நிலைக்குத் திரும்பி, இடது கையை இதேபோல கொண்டுவர வேண்டும். இது ஒரு செட். இதுபோல 15 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்: இடுப்புப்பகுதி, வயிற்றுப்பகுதிக் கொழுப்புகள் குறையும். தசைகள் நன்கு இறுகும். கலோரி எரிக்கப்படும். ஒட்டுமொத்த உடலுக்கும் வலு கிடைக்கும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


நாம் வெற்றிலை போடுவதால் ஏற்படும்சில நன்மை!

உணவு உண்டபின் பிறகு வெற்றிலை போடும் பழக்கம் உள்ளது. பொதுவான இந்த பழக்கத்தால் பல உடல் நற் பயன்கள் அடங்கியிருக்கிறது.

ஆனால் வெற்றிலையை சப்புவதால் உடல் எடையும் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை மிளகுடன் கலக்கும் போது, இந்த கலவை உடல் எடையை குறைக்கும் சிறந்த கருவியாக செயல்படும்.

வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!! இந்த செயலை செய்து வந்தால், எண்ணி 8 வாரங்களில் நல்ல பலனை காண்பீர்கள். இப்போது அது எப்படி வேலை செய்கிறது என்பதையும், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்கலாமா…?
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



ஊதா நிற கிழங்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

ஊதா நிற உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையைக் அதிகரிக்கச் செய்யாது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்ப்பதற்குத் சிறியதாகத் தோன்றினாலும், இது இதய நோயின் ஆபத்துகளைக் குறைக்கிறது. ஊதா நிற உருளைக்கிழங்கு ஆக்ஸிஜன் உட்பொருட்களைக் கொண்டுள்ளது

இக் கிழங்கு கொரியாவில், எடையைக் குறைக்கும் பிரபலமான நாட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

அதிக ரத்த அழுத்தத்துடன் அதிக எடையைக் கொண்ட 18 பேரிடம் ஒரு நாளைக்கு இரு முறை 6-8 சிறிய மைக்ரோவேவ் அளவுடைய ஊதா உருளைக்கிழங்குகள் கொடுத்து சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை 4 வாரங்களுக்கு நடைபெற்றது.

சோதனை முடிவில் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து காணப்பட்டதோடு உடல் எடையும் அதிகரிக்கவில்லை.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

நீங்கள் சர்க்கரை நோயில் இருந்து விடுபட வேண்டுமா?

சர்க்கரை நோயைத் தடுக்கும் அத்திபழம் அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு
 உண்டு. சர்க்கரை
நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.
அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள
பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.
சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



வெள்ளி, 31 மார்ச், 2017

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா,31,03.17

வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா. இன்று.14ம் நாள் பகல் 31.03.2017 வெள்ளிக்கிழமை
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் 
தேரில் உலா வந்தார்கள்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




நவற்கிரி நெற்

 
Blogger Templates