வியாழன், 13 அக்டோபர், 2016

திபேத்திய ஆன்மீகத்தலைவர் சுவிஸ் பேர்ன் மாநிலவிசையம்

இன்று 12. 10. 2016 புதன்கிழமை திபேத்திய ஆன்மீகத்தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத்தலைவருமான திரு. 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று சுவிற்சர்லாந்திற்கு வருகைதந்திருந்தார்.
இவருக்கான அரசவரவேற்பு பல்சமய இல்லத்தில் மிகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணிமுதல் புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் இவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில் சிறுகுழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
பல இளவயதினரும், சிறியோர்களும் தமது திபேத்பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தனர். பல்பண்பாட்டு நிகழ்வுகளையும் முன்றலில் ஆற்றினர். 12.30 தலைலாமா வருகைதந்தார். சுவிஸ் அரசின் சிறப்புக்காவற்துறையினரும், தனியார் பாதுகாப்பு நிறுவனமும் பாதுகாப்பு அளிக்க உள்நுழைந்தார். சீனப்பேரரசின் அறிவிக்கப்படாத முதல் எதிராய தலைலாமா விளங்குகிறார். ஆகவே இவருக்கான சிறப்புப் பாதுகாப்பு இவர் செல்லும் இடங்களெல்லாம் வழங்கப்படுகிறது.
உள்நுழைந்த தலைலாமா அவர்களை எட்டு சமயத்தலைவர்களும், பேர்ன் மாநில அரசதலைவரும், நடுவன் அரசின் பிரதிநிதிகளும் வரவேற்றனர். சைவநெறிக்கூடம் – அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
தலைலாமா அவர்களுக்கான விருந்தளிப்பினை சைவநெறிக்கூடம் பொறுப்பேற்றிருந்தது. ஈழத்தமிழ்ச் சைவ உணவு சைவநெறிக்கூடத்தால் சமைக்கபட்டடிருந்தது இவ்விருந்தோம்பலின் சிறப்பாகவும், யாவரையும் கவர்ந்த விடயமாகவும் அமைந்தது. உணவினை வழங்கிய யாவரும் ஈழத்தமிழ்ப் பெண்களா இருந்தனர், இவர்கள் தமிழ்ப் பாரம்பரிய உடையணிந்து உணவு வழங்கினர். சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 150 விருந்தினர்கள் இவ்விருந்தோம்பலில் பங்கெடுத்திருந்தனர். குறிப்பாக சுவிஸ் அரசியல் பிரமுகர்களும் சுவிஸ் அதிகாரிகளும், பல்சமயத்தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்த விருந்தாளிகளில் அடங்குவர். விருந்தோம்பலிற்கு அடுத்து பேராளர் உரையரங்கு நடைபெற்றது. அதற்கு மேலும் 150 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
விருந்தோம்பலை அடுத்து வரவேற்பு உரையினை பேர்ன் அரசதலைவர் திரு. சப்பேர் அவர்கள் ஆற்றினார்கள். பல்சமய இல்லத்தின் அறக்கட்டளைத்தலைவியாக விளங்கும் திருமதி கேர்டா கௌவுக் அவர்கள் பல்சமயத்தின் பெயரில் வரவேற்புரை ஆற்றினார்.
அடுத்த நிகழ்வாக தலைலாமா அவர்கள் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்குள் நுழைந்தார். செந்தமிழ்த் திருமறை வழிபாடு கருவறையில் நடைபெறும் திருக்கோவில் இதுவாகும்.
கோவிலுக்குள் வருகையளித்த தலைலாமா அவர்களை செந்தமிழருட்சுனையர்கள் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார், திருநிறை. திருச்செல்வம் முரளிதரன், திருநிறை. சிவலிங்கம் சுரேஸ்குமார், திருநிறை. குழந்தை விக்னேஸ்வரன், திருநிறை. இராஜேந்திரன் கிரிதரன், திருநிறை. நடராஜா தர்மசீலன், திருநிறை. காராளசிங்கம் விஜயசுரேஸ், திருநிறை. நாகராச ஜெயக்குமார், திருநிறை. தர்மசீலன் கலாமதி, திருநிறை. வசந்தமால ஜெயக்குமார், திருநிறை. தர்னன் செல்லையா மற்றும் சைவநெறிக்கூடுத்தின் மதியுரைஞர்கள் திருநிறை. சிவயோகநாதன் ஐயா (நடராஜா யோகேந்திரன்), திருநிறை. வினாசித்தம்பி தில்லையம்பலம் மற்றும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அடியார்கள், குழந்தைகள் முன்வந்து வரவேற்றனர்.
ஈழத்தில் இருந்து வருகை தந்திருந்த திருநிறை. மதுசூதனன் குழுவினர் மங்கள இசைவழங்க, தலைலாமா அவர்கள் தமிழ்ச் செல்வங்கள் சூழ்ந்து பூங்கொத்து அளிக்க, திருக்கோவிலை வலம் வந்து ஞானலிங்கேச்சுரத்தில் ஈழத்தின் வடிவத்தி அமையப்பெற்றிருக்கும் ஈகைலிங்கத்திற்கு சிறப்பு வழிபாட்டினை செந்தமிழ்முறையில் ஆற்றினார். சூழந்திருந்த குழந்தைகளும், அருட்சுனையர்களும் செந்தமிழ்த் திருமறை ஓதினர்.
இதற்கடுத்து கருவறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஞானலிங்கேச்சுரருக்கு சிறப்பு வழிபாட்டினை ஆற்றினார். மலர்களை அர்ச்சித்தும், நிறைவில் தீபவழிபாடு ஆற்றியும் தலைலாமா எம்பெருமானை வலம்வந்தார். வழிபாட்டின் நிறைவில் சைவநெறிக்கூடத்தின் சார்பில் தலைலாமா அவர்களுக்கும், பேர்ன்மாநில அரசதலைவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு பூமாலை அணிவித்தும், சைவநெறிக்கூடத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட பொன்னாடைபோர்த்தியும் மதிப்பளித்தனர்.
சுவிற்சர்லாந்து தேசியத் தொலைக்காட்சி எஸ்.ஆர்.எப் அனைத்து நிகழ்வுகளையும் பதிவுசெய்து உடன் வெளியிட்டது 
இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 15 மார்ச், 2016

நாம் பகலில் நித்திரை கொள்வது நல்லதா கெட்டதா?

thukkam
உணவு, உடை, வீடுபோல தூக்கமும் அனைவருக்கும் அவசியம். நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வைத் தந்து, ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் தருவது தூக்கம்தான்.
இரவில் தூங்குவதுபோலவே பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவது இன்று பலருக்கும் வாடிக்கையாக உள்ளது. பகல் தூக்கத்தால் உடல் எடை கூடிவிடும், சோம்பேறித்தனம் அதிகரிக்கும் என்பன போன்ற கருத்துக்கள் நம்மிடையே உலவிவருகின்றன. உண்மையில் பகல் தூக்கம் நல்லதா… கெட்டதா?
பகல் தூக்கமபகலில் உறங்கும் குட்டித்தூக்கத்துக்கு `நாப்’ (Nap) என்று பெயர். காலை முதல் மதியம் வரை உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை தரும்போது, 20-30 நிமிடங்கள் உறங்கினால், உடலும் மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகிவிடும்.
அனைவருக்கும் பகல் தூக்கம் தேவையா?
பகல் தூக்கம் என்பது அனைவருக்கும் அவசியமானது அல்ல. இரவில் தேவையான அளவு தூக்கமும் பகலில் வேலை நெருக்கடியும் இல்லாதவர்களுக்கு, பகல் தூக்கம் அவசியம் இல்லாதது. இவர்கள் பகலில் தூங்கினால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
இன்னும் சிலருக்கு எவ்வளவுதான் வேலைக் களைப்பு இருந்தாலும், பகலில் தூக்கம் வரவே வராது. இவர்களும் பகல் தூக்கத்தைப் பற்றி கவலைகொள்ள வேண்டியது இல்லை.
யார் தூங்கலாம்?
இரவு முழுவதும் விழித்திருந்து வேலை பார்க்க வேண்டிய அவசியம் உள்ளவர்கள், வேலைக்கு முன்னரே ஒரு குட்டித்தூக்கம் போட்டு விழிக்கலாம்.
தொடர்ச்சியாக நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், சிறிது நேர ஓய்வாகத் தூங்கலாம்.
பொதுவாக, நீண்ட தூரம் வாகனம் ஓட்டுபவர்கள் குட்டித்தூக்கம் போடலாம்.
20 நிமிடத் தூக்கம் நம்மை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும். நினைவுத்திறனை அதிகரிப்பதுடன் வேண்டாத விஷயங்களையும் ஞாபகத்தில் இருந்து நீக்க உதவும். சில நாடுகளில் இதுபோன்று பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவது ஒரு வழக்கமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
பகல் தூக்கத்தின் நன்மைகள்
பகலின் குட்டித் தூக்கத்தால் நமது விழிப்புஉணர்வு அதிகரிக்கிறது. மேலும், நமது செயல்திறனில் 24 சதவிகிதம் 
அதிகரிக்கிறது.
பகலில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே தூங்க வேண்டும். அதீத பகல் தூக்கம், உடலுக்கு நல்லது அல்ல. நேர வரையறை செய்யப்பட்ட குட்டித்தூக்கத்தால் உற்சாகமாகச் செயல்பட முடியும்.
பகல் தூக்கம், புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் தருவதோடு, அந்த நாளின் செயல்திறனையும் அதிகரிக்கிறது.
பகல் தூக்கமானது இருதய நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூக்கத்தின்போது கவனிக்க வேண்டியவை
குட்டித் தூக்கமானது 30 நிமிடங்களுக்கு மேலே செல்லாமல்

பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், 30 நிமிடங்களுக்கு மேலான பகல் தூக்கம் சோம்பல் உணர்வைக் கொடுப்பதோடு நமது இரவுத் தூக்கத்தையும் கெடுக்கும்.

தூங்குவதற்கு அமைதியான காற்றோட்டமான இடத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம். மங்கலான ஒளி உள்ள இடமும் உகந்தது.

பகல் தூக்கத்துக்கு சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று.

வழக்கமாக எந்த நேரத்தில் நீங்கள் உற்சாகம் இழக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து நேரத்தைத்தேர்ந்தெடுக்கலாம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
thukkam . இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


thukkalx

நவற்கிரி நெற்

 
Blogger Templates